Sunday, March 3, 2013

உங்கள் ஆத்தும இரட்சிப்பு

உங்கள் ஆத்தும இரட்சிப்பு

இந்த முக்கியமான விடைகளை கண்டுபிடிக்க உங்கள் ஆத்தும இரட்சிப்பின் முக்கியமான படிமுறைகளை பின்பற்றுங்கள்...
# படிமுறை 01


உங்களை குறித்ததான தேவனுடைய வாஞ்சை / விருப்பம் : வாழ்வு , செழிப்பு , நித்தியம்


என்று பரிசுத்த வேதம் சொல்லுகிறது.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
யோவான் 10:10

உங்கள் ஆத்துமா பாவத்தினால் கெட்டுப்போகாமல் பாவத்திலிருந்து விடுதலையாக்கபட்டு நித்தியமாக என்றென்றைக்கும் தேவனோடு வாழ ஒரு மிகசிறந்த தியாகம் / பலி தேவைபடுகிறது. 

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 
யோவான் 3:16

தேவன் உங்களோடு உறவாட / ஐக்கியப்பட விரும்புகிறார்.
என்ன ஒரு அற்புதமான வரத்தை பிதா(தேவன்) நமக்கு  தந்திருக்கிறார்.

தேவன் தமது சொந்த குமாரனை நமக்கு இரட்சிப்பையும் நித்திய வாழ்க்கையையும் கொடுக்கும்படி தமது சொந்த குமாரனை தந்தாலும் கூட ஏன் அநேகமான ஜனங்கள் தேவன் நமக்கு தரும்படி திட்டமிட்டவற்றை பெற்றுகொண்டவர்களாக

இல்லை ?

நிதானமாக பகுத்தறிவதினால் விடை காணக்கூடிய கேள்வி ஒன்றுதான் இது.


# படிமுறை 02

நீங்கள் தேவனை விட்டு பிரிந்து இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு பிளவு / இடை வெளி உள்ளது.
தேவன் நமக்கு ஆத்தும இரட்சிப்பையும்,செழிப்பான வாழ்வையும் , நித்தியஜீவனையும் பெற்றுகொள்ளும்படி அவர் நமக்கு ஒரு வழியை தந்திருக்கிறார். ஆனால் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுய இஷ்டத்தின் படி வாழ்ந்து சர்வ வல்லமை படைத்த தேவனுக்கு கீழ்படியாதிருந்தார்கள்.
இந்த சுயநல தெரிவுகள் சுய இஷ்ட வாழ்க்கை தொடர்ந்தும் மனிதனை பிதாவாகிய தேவனிடமிருந்து பிரித்தது.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று தேவனுடைய வார்த்தை நமக்கு சொல்லுகிறது.


தேவன் தமது வார்த்தையில் சொல்லுகிறார்..
"மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்."  நீதிமொழிகள் 14:12

மேலும் தேவன் சொன்னார்

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது."  ஏசாயா 59:2

பவுல் அப்போஸ்தலர் ரோமர் 3:23,24 இல் குறிப்பிடுகிறார்.

"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;"

ரோமர் 6:23 இல் நாம் வாசிக்கிறோம்.
" பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."

ஒவ்வொரு மனிதனும் தேவனை அறிந்து கொள்ளவும், அவரோடு ஐக்கியம்/உறவு வைத்துகொள்ளவும் தகுதியுடையவனாக படைக்கப்பட்டிருந்தான்.

4ம் 5ம் நூற்றாண்டிலே வாழ்ந்த தேவ ஊழியர் அகஸ்டின் நமக்குள் உள்ள இந்த வாஞ்சை/விருப்பத்தை " தேவன் உருவாக்கிய வெற்றிடங்கள் " என அழைக்கிறார்.
பணக்காரர்களும், பிரபலமானவர்களும், சாதனையாளர்களும், விளையாட்டு வீரனும் ஆன சிறந்த ஒரு வாழ்கையை வாழ்பவர்களாக காணப்படுகிற நபர்களை பற்றி ஒவ்வொருநாளும் நாம் கேள்விபடுகிறோம். ஆனாலும் இன்னும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள வெறுமையை /வெறுமையுணர்வை பொருட்களால் நிரப்ப முயற்சி செய்கிறார்கள்.


நற்கிரியைகளை செய்து, நன்னடத்தை, மதம் வழிபாடுகள் போன்றவற்றை கூட முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், இன்னமும் அவர்கள் வெற்றிடம் மாறவில்லை. தேவனால் மாத்திரமே, அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாகவே அந்த வெற்றிடத்தை நிரப்பமுடியும்.


 # படிமுறை 03
பாவத்திற்கும், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள பிரிவுக்கும் ஒரே ஒரு தீர்வை மாத்திரமே தேவன் நமக்கு தந்திருக்கிறார் என்ற உண்மையை ஏற்றுகொள்ளுதல்.

இயேசு கிறிஸ்துவாகிய தேவனுடைய குமாரன் மட்டுமே நம்மை படைத்த தேவனிடம் செல்வதற்கான வழி.
பிதாவாகிய தேவனோடு நம்மை ஒப்புரவாக்குகிறவர் ஆண்டவராகிய இயேசு மாத்திரமே, அவராலே மட்டுமே அதை செய்ய முடியும்.

மனுக்குலம்/மனிதன் வேறு தீர்வுகளை தேடி வேறு தேவர்களை வணங்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்து ஒருவரே நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, கல்லறையில் இருந்தும், நித்திய மரணத்திலிருந்தும் வெற்றியுடன் உயிரோடு எழுந்தார்.
நமது பாவத்திற்கான தண்டனையை அவர் பெற்றுக்கொண்டு தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை /பிரிவை இணைத்தார்.
சத்திய வேதம் சொல்லுகிறது,
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”  ரோமர் 5:8
நாங்களும் சொல்லுகிறோம்,
“ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.”
1 பேதுரு 3:18

ஒரே ஒரு வழி மாத்திரமே வழங்கப்பட்டிருக்கிறது.
“தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.”
1 தீமோத்தேயு 2:5

யோவான் 14:6 இல் வாசிக்கிறோம் இப்படியாக..
” அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”

சர்வவல்லமையுள்ள தேவன் ஒரே வழியை கொடுத்திருக்கிறார்.
பிதாவாகிய தேவனிடத்தில் உங்களை திரும்ப சேர்க்கவும், இணக்குவிக்கவும் நியாயத்தை தெரிவிக்கவும், காண்பிக்கவும் ஆண்டவர் இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்து, தம் முழு இரத்தத்தையும் சிந்தி மூன்றாம் நாளில் மரணத்தை விட்டு உயிரோடு எழுந்து தேவனுக்கெதிரான நமது முரட்டாட்டத்திற்கும் நமது பாவத்திற்கும்மான தண்டனையை செலுத்தினார்.

# படிமுறை 04
 இயேசு கிறிஸ்துவை உங்களுடைய ஆண்டவராகவும், இரட்சகராகவும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகுங்கள்.
அழிவில் இருந்து உங்கள் ஜீவனை மீட்க/ இரட்சிக்க, இயேசு கிறிஸ்துவில் மாத்திரம் உங்கள் நம்பிக்கையை வைப்பதன் மூலம் தேவனுடன் உங்கள் உறவை புதுப்பிக்கவும், அவரிடத்தில் திரும்ப கொண்டுவரப்படவும் முடியும்.

என்ன ஒரு நம்ப முடியாத பரிமாற்றம்: தேவனுடைய சிறந்ததற்காக உங்களுடைய தீமை/பாவம்.
Your worst for God’s best!
இந்த படிமுறையானது நீங்கள் உங்கள் பாவங்களை உங்களை விட்டு நீக்கும் படியும், இயேசு கிறிஸ்துவை உங்கள் தேவனாகவும் இரட்சகராகவும் இருக்கும் படி அவரை உங்கள் உள்ளத்திற்குள் வரும்படி அவரிடம் கேட்பதன் மூலமாகவே நடைபெறும்.
 தேவனுடைய வார்த்தை தெளிவாய் சொல்லுகிறது.
“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.”  வெளி 3:20

சத்திய வேதம் சொல்லுகிறது,
“என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.” ரோமர் 10:9
> உங்களது பாரங்களும், பாவங்களும் உங்களை விட்டு நீங்கும் படி விரும்புகிறீர்களா ?
> உங்கள் பாவங்களில் இருந்து மனம் திரும்பவும், பொல்லாத வழியை விட்டு திரும்பிகொள்ளவும் விரும்புகிறீர்களா ?
> ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் தேவனாகவும், இரட்சகராகவும் இப்பொழுது பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா ?

# படிமுறை 05
 உங்கள் வாழ்க்கைக்குள் இயேசு கிறிஸ்துவை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்.
இந்த வேளையில் உங்கள் வாழ்கைக்கான இந்த மிக முக்கியமான ஜெபத்தை சொல்லுங்கள்.  

அன்பான இயேசுவே,
நீர் தேவனுடைய குமாரன் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.
நீர் இந்த பூமிக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தீர் என நம்புகிறேன்.
 என் ஆத்தும இரட்சிப்புக்காக நீர் உமது பரிசுத்த இரத்தத்தை சிந்தி எனக்காக சிலுவையில் மரித்தீர் என நான் விசுவாசிக்கிறேன்.
நீர் மரணத்திலிருந்து  உயிரோடு எழுந்து, பரலோகத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட்டீர் என்று நான் விசுவாசிக்கிறேன்.
நீர் திரும்பவும் இந்த பூமிக்கு மறுபடியும் வருகிறீர் என நான் நம்புகிறேன்.
அன்பான இயேசுவே,
நான் ஒரு பாவி, என் பாவங்களை மன்னித்தருளும். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இப்பொழுது என்னை சுத்திகரியும்.
என் இதயத்திலே(உள்ளத்திலே) வாரும்.
என் ஆத்துமாவை இப்பொழுதே இரட்சியும்.
என் வாழ்க்கையை நான் உமக்கு தருகிறேன்.
நான் உம்மை எனது தேவனாக, ஆண்டவராக, இரட்சகராக, இப்பொழுதே ஏற்றுக்கொள்ளுகிறேன்.
நான் என்றென்றும் உம்முடையவன்/உம்முடையவள்.
என் மீதி வாழ்நாள் எல்லாம் உம்மை சேவித்து, உம்மை பின்பற்றுவேன்.
இந்த நிமிஷத்லிருந்து நான் உமக்கே சொந்தம்.
ஆண்டவரே ! நான் இனி இந்த உலகத்திற்கோ அல்லது என் ஆத்தும எதிரிக்கோ நான் சொந்தமில்லை.
நான் உமக்கு மட்டுமே சொந்தம் என் இயேசுவே !
நான் மறுபடியும் பிறந்துவிட்டேன் !
ஆமேன் !

இந்த ஜெபத்தை செய்து உங்கள் பாவங்களை அறிக்கை பண்ணி இயேசு கிறிஸ்துவை உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொண்டதினால் மன்னிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையாய் மாறுவதற்கான உரிமையை தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
பரிசுத்தமான சத்திய வேதாகமம் இந்த உறுதியான நம்பிக்கையை உங்களுக்கு தருகிறது.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 
 யோவான் 1:12
இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை பெற்றுகொண்டீர்களாயின் நாங்களும் உங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைகிறோம்.
நீங்கள் இருக்கிற இடத்தில் உள்ள ஒரு ஆவிக்குரிய சபையை ஆண்டவருடைய உதவியுடன்,ஜெபத்தில் ஆண்டவரிடத்தில் கேட்டு அறிந்து அங்கு ஒழுங்காக செல்லுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக !

 

Sunday, February 24, 2013

Hindrances to Rise for the Lord Jesus Christ

தேவனுடைய ஊழியகாரர் சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் வழங்கிய புதிய தேவ செய்தியை கேட்க இங்கே Click செய்யுங்கள்.

தேவனுடைய பிள்ளைகள் கர்த்தருக்காக எழும்பி பிரகாசிக்க தடையாய் இருக்கும் மூன்று காரியங்கள் பற்றி அறிந்து கொள்ள இந்த தேவ வார்த்தைகளை கேளுங்கள்.

Saturday, August 4, 2012

Muslim near death experience sees Jesus (Isa) becomes Christian - Part 2

Muslim near death experience sees Jesus (Isa) becomes Christian - Part 1

Muslim became Christian, Faisal Malick Testimony

Hell Testimony




Hell Testimony

-------------------------------------------------------------------------------


­"And the devil that deceived them" Revelation 20:10

In the Bible Lucifer (Satan) was cast out of heaven because of his Pride: Isaiah 14:12-15, Ezekiel 28:13-19

In the Bible, Satan is the Destroyer: 1 Corinthians 10:10

Jesus is the Son of God (Look at Bible Verses below)

Isaiah 9:6 For unto us a Child is born, Unto us a Son is given; And the government will be upon His shoulder. And His name will be called Wonderful, Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.

John 1:1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God... 1:14 And the Word became flesh and dwelt among us,

John 8:58 Then Jesus said to them, "Most assuredly, I say to you, before Abraham was, I AM."

John 10:30-33 Jesus answered them, "I and My Father are one." Then the Jews took up stones again to stone Him. Jesus answered them, "Many good works I have shown you from My Father. For which of those works do you stone Me?" The Jews answered Him, saying, "For a good work we do not stone You, but for blasphemy, and because You, being a Man, make Yourself God."

John 14:9-11 Jesus said to him, "Have I been with you so long and yet you have not known Me, Philip? He who has seen Me has seen the Father; so how can you say, 'Show us the Father'?"

John 20:28 And Thomas answered and said to Him, "My Lord and my God!"

John 14:6 Jesus answered, "I am the way and the truth and the life. No one comes to the Father except through me.

1 Timothy 3:16 And without controversy great is the mystery of godliness: God was manifested in the flesh, Justified in the Spirit, Seen by angels, Preached among the Gentiles, Believed on in the world, Received up in glory.

Titus 2:13 looking for the blessed hope and glorious appearing of our great God and Savior Jesus Christ

Hebrews 1:8,9 But to the Son He (God) says: "Your throne, O God, is forever and ever; A scepter of righteousness is the scepter of Your kingdom. You have loved righteousness and hated lawlessness; Therefore God, Your God, has anointed You with the oil of gladness more than Your companions."

2 John 1:7 For many deceivers have gone out into the world who do not confess Jesus Christ as coming in the flesh. This is a deceiver and an antichrist.

Romans 5:8 "But God demonstrates His own love toward us, in that while we were still sinners, Christ died for us."

Revelation 1:8 "I am the Alpha and the Omega, the Beginning and the End," says the Lord, "who is and who was and who is to come, the Almighty."